ஆண்டு ரூ. 1147 கோடி சம்பளம்!! நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்கின் சொத்தை கட்டிக்காக்கும் இந்தியர்..
எலான் மஸ்க்
உலகின் டாப் நம்பர் 1 பணக்காரராக திகழ்ந்து வரும் எலான் மஸ்க், மின்சார கார், விண்வெளி தொழில்நுட்பம், சமூக ஊடகம் என பல துறைகளில் கால் பதித்து தன்னுடைய சொத்துக்களை சேர்த்து சாதனை படைத்து வருகிறார்.
அவருடைய நிதியை கையாளும் பொறுப்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு நபர் தான் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் எலான் மஸ்கின் புதிதாக தொடங்கியுள்ள கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கபப்ட்டுள்ளாராம்.
வைபவ் தனேஜா
அவர் வேறு யாருமில்லை, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பட்டயக்கணக்காளர் வைபவ் தனேஜா தானாம். இவர் தான் எலான் மஸ்கின் செல்வத்தை கட்டிக்காப்பவர் என்று கூறலாம்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இவர் செயல்பட்டும் புதிதாக எலான் மஸ்க் ஆரம்பித்துள்ள அமெரிக்க கட்சியின் பொருளாளர் பதிவியும் வழங்கப்பட்டுள்ளதாம். கட்சிக்கு வரக்கூடிய நிதிகள், அதனை பிரித்து பட்ஜெட் போட்டு ஒதுக்கீடு செய்வது, நிதி சட்டங்களுக்கு உட்பட்டு கட்சி இயங்குவதை உறுதி செய்வது என பல பொறுப்புகள் இவர் வசம் தான் இருக்கிறது.
ரூ. 1147 கோடி சம்பளம்
பல நிறுவனங்களில் வேலை செய்து வந்த வைபவ் தனேஜா, 2017ல் டெஸ்லா நிறுவனத்தில் இணைந்தார். இவரின் திறமையை பார்த்து 2023ல் தலைமை நிதி அதிகாரி பொறுப்பினை எலான் வழங்கினார்.
2024ல் மட்டும் இவர் 1147 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். இவருடைய சம்பளத்தில் பெரும்பாலான தொகை டெஸ்லா நிறுவன பங்குகளில் இருந்து மட்டுமே வந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான இயக்குநராகவும் தனேஜா பதவியை வகித்து வருகிறார்.