உங்க பேத்தி வயது பொண்ண இப்படியா சொல்றது?.. கொந்தளித்த நெட்டிசன்கள்!
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருப்பவர் தான் வைரமுத்து. இவர் பாடலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

சமீபத்தில் +12 மாணவி நந்தினி என்பவர் 600/600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வைரமுத்து மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நந்தினியை வைரமுத்து தங்கை என்ற குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு, +12 மாணவி உங்களுக்கு தங்கையா என்று நெட்டிசன்கள் வைரமுத்துவை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஒரு
— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2023
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது
எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்
உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே! pic.twitter.com/bkSbrmrlqt
