"புதர் ஒன்று குடை ஆனதும்".. டபுள் மீனிங்கில் புகுந்து விளையாடியிருக்கும் வைரமுத்து!
வைரமுத்து பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அதில் டபுள் மீனிங் அர்த்தங்களுடன் எழுதிய பாடல் வரியை நாம் பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2017 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காற்று வெளியிடை. இப்படத்தில் இடம் பெற்றுள்ள சாரட்டு வண்டியில் பாடலில் "ஆணுக்கோ பத்து நிமிஷம் பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம்" என்ற வரிகள் அமைந்திருக்கும். இது டபுள் மீனிங் அர்த்தங்களுடன் இருக்கும்.
நடிகர் அஜித் குமார் சசி இயக்கத்தில் வெளியான அசல் படத்தில் பாவனாவிற்கும் அஜித்துக்கும் ரொமான்டிக் பாடல் இருக்கும். அந்த பாடலில் இரட்டை அர்த்தம் இருக்கும்.
"பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஒன்று குடை ஆனதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்தாய் மறந்தது என்ன கதை"
1998 -ம் ஆண்டு பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஜீன்ஸ் திரைப்படம் வெளியானது. இதில் அன்பே அன்பே என்ற பாடல் இடம் பெற்று இருக்கும்.
அதில் இரட்டை அர்த்தத்தில் வைரமுத்து எழுதியிருப்பார். "பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி"