தலைக்கனத்தில் 38 வருட பகையை மறக்காத இளையராஜா.. சொல்ல கூச்சபடாமல் வைரமுத்து செய்த செயல்..
தமிழ் சினிமாவில் இசைஞானி என்று புகழப்பட்டு வரும் இளையராஜா ஒருசில செயல்களால் பலரின் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார். அப்படி இளையராஜா, தன்னுடன் பயணித்த முக்கிய நண்பர்களை பகைத்து கொண்டு ஆணவத்தில் ஆடி வந்தார். கவிஞர் வைரமுத்துவிடம் 38 ஆண்டுகளுக்கு முன் நிழல்கள் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இன்று வரை அவருக்காக பாடல் எழுதாமல் இருக்கிறார்.
ஆனால் வைரமுத்து, பல மேடைகளில் இளையராஜாவை புகழ்ந்து பேசியும் வருகிறார். சமீபத்தில் கூட மறைந்த மனோபாலாவிற்கு இரங்கலுக்கு இளையராஜா பேசியது பலரை வெறுப்படையச் செய்தது.
இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திருவின் குரல் என்ற படத்தில் நிகழ்ச்சியில் வைரமுத்து கலந்து கொண்டு பேசியிருக்கிறார். பல கவிதைகள் மூலம் பாரதிராஜாவை புகழ்ந்து பேசியிருந்தார் வைரமுத்து.
மேலும், இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின் எல்லாமே ரோபாக்களின் யுகம் வந்த பிறகு, உலக்கை, பஞ்சாராம் உள்ளிட்ட தமிழகர்களின் ஆயுதம் வாழ்வு கலாச்சாரம் கருப்பொருட்களை உரிப்பொருள் இவைகளை தேடுகிற தமிழன், ஆராய்ச்சியாளர் பாரதிராஜா படத்தை பார்த்தால் மட்டும் போது ஒரு 300, 400 ஆண்டு கலாச்சாரம் விரியும். இன்று பழை வாழ்க்கையை தோண்டுவதற்கு கீழடியை தோண்டிக்கொண்டிருக்கிறோம்.
நாளைக்கு பழைய வாழ்க்கையை தோண்டுவதற்கு பாரதிராஜாவை தோண்டினால் போதும் வைரமுத்துவை தோண்டினால் போதும், நான் சொல்லுவதற்கு கூச்சப்படவில்லை இளையராஜாவை தோண்டினால் போதும் என்று கவிஞர் கவிபேரரசு வைரமுத்து பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.