நாஞ்சில விஜயனை சபித்தது உண்மைதான்..ஆனால்!! விஜே வைஷு பதிலடி...

Vijay Television Gossip Today Nanjil Vijayan
By Jai Aug 29, 2026 08:15 AM GMT
Report

நாஞ்சில் விஜயன் - வைஷு

விஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜயன் என்னுடன் நெருங்கி பழகி என்னை ஏமாற்றி விட்டதாக சமீபகாலமாக திருநங்கை வைஷு புகாரளித்து, வீடியோக்களில் மோசமாக பேசியும் வந்தார்.

இதனையடுத்து நாஞ்சில் விஜயன் சமீபத்தில் தான் மனைவியைவிட்டு பிரிந்து தனிமையில் வாழ்கிறேன் என்றும் திருநங்கை சாபம் உன்னை சும்மா விடாதுன்னு. அந்த சாபம் இன்று பலித்துவிட்டது என்கிற சந்தோஷம்.

நாஞ்சில விஜயனை சபித்தது உண்மைதான்..ஆனால்!! விஜே வைஷு பதிலடி... | Vaishu About Nanjil Vijayan Separate His Wife

நிச்சயமாக இன்று உங்களுக்கு நல்ல உறக்கம் வரும் என்று நினைக்கிறேன், நீங்கள் ஜெயித்து விட்டீர்கள், நன் தோற்றுவிட்டேன் என்று அதங்கத்துடன் இரு பதிவினை பகிர்ந்திருந்தார்.

இதற்கு பலரும் வைஷுவை விமர்சித்து வந்த நிலையில், தற்போது ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

சபித்தது உண்மைதான்

அதில், என் சாபத்தால் மனைவியை பிரிந்துவிட்டேன் என்கிறார். கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் நியாயம் கிடைக்க தான் போராடினேன், கணவன் - மனைவி பிரிய வேண்டும் என ஒருபோதும் சபிக்கவில்லை. நீங்க ரெண்டு பேரும் பிரிந்து போக வேண்டும் என நான் சத்தியமாக எதையும் செய்யவில்லை. தயவு செய்து உங்களை கேட்டுக்கொள்கிறேன், எனக்கு நிறைய கால் வந்து திட்டுகிறார்கள்.

நாஞ்சில விஜயனை சபித்தது உண்மைதான்..ஆனால்!! விஜே வைஷு பதிலடி... | Vaishu About Nanjil Vijayan Separate His Wife

பிக்பாஸுக்காகத் தான் இதை செய்கிறேன் என்று சொல்கிறார்கள், என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டார்கள், ஆனால் நான் போகவில்லை. என்னை வாழவிடுங்கள், என் வேலையை முடக்கிவிட்டீர்கள். என்னை அசிங்கப்படுத்தி பிக்பாஸுக்கு போவதை தடுக்கிறீர்கள், நான் பிக்பாஸுக்கு போகவில்லை. நான் சபித்தது உண்மைதான், ஆனால்எனக்கு நடந்த அநீயாயம் உங்களுக்கு உணரணும் என்று தான் செய்தேன் என வீடியோ பதிவு செய்துள்ளார். இதற்கும் பலரும் தங்களை விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.