தியேட்டருக்குள்ள எதுக்குடா பைக்கு? வலிமை ஃபேன்ஸ் அட்ராசிட்டிஸ்

Valimai Ajith Kumar
By Parthiban.A Feb 23, 2022 04:10 PM GMT
Report

வலிமை படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அஜித்தை பெரிய திரையில் பார்த்து நீண்டகாலம் ஆகிவிட்டதால் ரசிகர்கள் இந்த படத்தை எப்படி கொண்டாடுவார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

மேலும் இந்த படத்தில் அஜித் ரேஸ் பைக் ஓட்டி நடித்திருக்கும் காட்சிகள் கவனம் ஈர்த்து இருக்கிறது. ட்ரைலரில் அஜித் பைக்கில் இருந்து ஒரு பில்டிங் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியில் வருவார். அந்த காட்சியில் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என தற்போது ஒரு மீம் உலா வருகிறது.

அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டருக்குள் பைக் எடுத்து செல்ல, அது எதுக்கு என கேட்டால், அஜித் பில்டிங்கில் இருந்து பைக்கில் குதிக்கும் காட்சி வந்தால் அதை கொண்டாட பால்கனியில் இருந்து பைக்கை screenக்கு விட வேண்டியது தான் என ரசிகர் சொல்வது போல காமெடியாக மீம் வடிவமைத்து இருக்கிறார்கள்.

மீம் இதோ..

தியேட்டருக்குள்ள எதுக்குடா பைக்கு? வலிமை ஃபேன்ஸ் அட்ராசிட்டிஸ் | Valimai Fans Bike Meme

இந்த அட்ராசிட்டி எல்லாம் ஒருபுறம் இருக்க, நாளை என்னவெல்லாம் தியேட்டரில் நடக்குமோ என பொறுத்திருந்து பார்க்கலாம்.