வலிமை ஓடுமா..? ஓடாதா..? முதல் விமர்சனம் கூறிய நடிகர் அஜித் குமார்

valimai ajith kumar boney kapoor ak h.vinoth review huma qureshi karthikeya bike racing
By Kathick Dec 12, 2021 06:10 PM GMT
Report

அஜித்தின் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக பல இன்னல்களை சந்தித்து தற்போது வெளியாக காத்திருக்கிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் Glimpse வீடியோ மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் விஜய் டிவி புகழ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில் வலிமை படத்தை பார்த்துள்ளாராம். அதில் வரும் ரேஸ் மற்றும் பைக் சம்மந்தப்பட்ட காட்சிகள் அருமையாக வந்திருக்கிறதாம். படத்தை பார்த்துவிட்டு அஜித் சந்தோசம் அடைந்ததாவும், படமும் சிறப்பாக இருப்பதாக படக்குழுவை அஜித் பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் வலிமை படத்தை பார்க்க அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சக சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.