கோடிக்கு ஆசைப்படுபவன் கிடையாது இந்த போனி கபூர்! இத்தனை கோடிக்கு பேரமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் வலிமை. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜனவரி 13ல் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து காணப்படுவதால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதித்தும் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை 50 சதவீதம் மட்டுமே தியேட்டர்களில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் வலிமை படம் மிகப்பெரிய வசூலை இழக்க நேரவுள்ளதாம்.
இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பணியாளர்கள் உட்பட பல பாதிக்கப்படுவார்கள். இதனால் போனி கபூர் என்ன செய்வது என்று குழம்பத்தில் இருந்து வருகிறார்.
இதற்காக படக்குழுவினருடன் பேசி வந்த நிலையில் ஓடிடி தளத்தினர் சிலர் 200 கோடிக்கு வியாபாரமாக பேசியுள்ளார்களாம். அதற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் கண்டிப்பாக வலிமை தியேட்டரில் தான் வெளியாகும் என்று கூறி வருகிறாராம்.