வரும் ஆனா வராது! முதல்வர் கையில் தள்ளப்பட்ட வலிமை..

pongal valimai ajithkumar hvinoth boneykapoor
By Edward Jan 08, 2022 05:15 AM GMT
Report

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நடிகர் அஜித்தின் வலிமை படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் லாக்டனும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது.

இதனால் தியேட்டர்களில் வலிமை படம் வெளியாகாமல் சிரமத்தில் உள்ளது. 50 சதவீதம் மட்டும் தியேட்டரில் பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளதால் வசூல் ரீதியாக பாதிப்பு அடையும். ஆனால் தமிழக அரசு 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி தருவதை பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

சில நாட்களில் கொரோனா தொற்று குறைந்தால் அனுமதி அளிக்கலாம் எனவும் பேசி வருகின்றனர். பொங்கல் வரை மட்டும் கொஞ்சம் விட்டு புடிச்சிட்டு பிறகு கடுமையான ஊரடங்கு அமுலுக்கு வரபோவதாகவும் கூறுகின்றனர்.

எது எப்படியோ? வலிமை படம் பொங்கலுக்கு அல்லது ஜனவரி 26 ஆம் தேதி வெளி வர அதிக வாய்ப்பு உள்ளதாம். ஆனால் கொரோனா பரவல் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. எப்பொழுது வைரஸ் கட்டுக்குள் வருகிறதோ அப்போதுதான் படத்தை வெளியிடுவோம் என்று கூறி வருகிறார்கள்.