இதெல்லாம் தேராது! வெளியாகாமலே அஜித்திடம் 300 கோடிக்கு பேரம்..
ajith
valimai
ott
hvinoth
boneykapoor
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சமீபத்தில் நடித்து முடித்து வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருந்த வலிமை படம் கொரோனா லாக்டவுனால் தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரிடம் பல ஓடிடி தளங்கள் சந்தித்து பேசி வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் படத்தினை தியேட்டரில் தான் வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தாராம்.
அப்படி இருக்கையில் போனி கபூரிடம் ஓடிடி தளம் ஒன்று 300 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி சென்றுள்ளதாம். ஆனால் இதை ஏற்க மறுத்துவிட்டாராம் போனிகபூர்.