என் முகத்துல பயம் தெரியுதா? பயத்தை காமிக்கும் வலிமை..

pongal valimai ajithkumar boneykapoor rrr
By Edward Jan 06, 2022 08:33 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். அவர் நடித்த வலிமை படம் பல ஆண்டுகள் படப்பிடிப்பிற்கு பிறகு வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தி வருகிறார்கள்.

தற்போது தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அதைதொடர்ந்து நாள் தோறும் இரவு 10 மணி முதல் காலை 5 வரை இரவு ஊடரங்கையும் அமல் படுத்தியுள்ளது. மேலும் தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களை கொண்டு இயக்க உத்திரவிட்டுள்ளது.

இதனால் ஆர் ஆர் ஆர், ராதே ஷாம் உள்ளிட்ட பல படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

ஆனால் மற்ற படங்கள் வசூல் தொகைக்காக ரிலீஸ் தேதியை மாற்றி பின்வாங்கிய நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரபூர்வமாக கண்டிப்பாக படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறியுள்ளாராம்.