5 மாதமாக இழுத்தடித்த வலிமை டிரைலர்! வெளியாகாமல் இருக்க இதுதான் காரணம்..

pongal valimai yuvan ajithkumar hvinoth valimaiupdate valimaiTrailer
By Edward Dec 30, 2021 01:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து பல கோடி ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் அஜித்குமார். விசுவாசம், நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரு ஆண்டுகளாக கொரோனா இடர்பாடுகளால் தள்ளி தள்ளிச்சென்று ஒரு வேலையாக படத்தினை வரும் 2022 பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

அதற்கு முன் எப்போது டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் வலிமை அப்டேட் எங்கே என்று கேள்வி கேட்டு வந்தனர். சில காரணங்களால் டிரைலர் வெளியாகாமல் இருந்ததுள்ளது. தற்போது அதற்கு என்ன காரணம் என இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

படத்தில்  இரு சிஜி காட்சிகள் இருந்ததாகவும் இந்த சிஜி காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு எடிட்டிங் செய்து வருவதற்கு தாமதம் ஆனதால் தான் வலிமை படத்தின் டிரைலர் வெளியிட முடியவில்லையாம்.

தற்போது டிரைலர் வெளியாகி 5 நிமிடத்தில் 3 லட்சத்திற்கு மேல் பார்வையும் 10 நிமிடத்தில் 6 லட்சம் பார்வையாளர்களையும் பெற்று வருகிறது.


GalleryGalleryGallery