2வது வாரமே மந்தமான வசூல்!! டியூட் பட பாக்ஸ் ஆபிஸ் இவ்வளவா?
Dude
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த Dude திரைப்படம் சில சர்ச்சையில் சிக்கினாலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது.

முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வரும் Dude, இதுவரை ஏழு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் 7 நாட்களை நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2வது வாரம்
அதன்படி, இப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது படம் ரிலீஸாகி 2வது வாரம் துவங்கிய நிலையில், 8வது நாளில் வெறும் ரூ. 0.74 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறதாம்.

போகப்போக படத்தின் வசூல் குறைந்தாலும் பிரதீப் நடித்து வெளியான 3 படங்கள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஹார்ட்டிக் அடித்துள்ளதை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.