அச்சுஅசல் நயன்தாராவாக மாறிய சின்னத்திரை நயன்தாரா.. வாணி போஜனின் க்யூட் புகைப்படம்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்கள் எக்கச்சக்கம். அதில் ஒருவராக செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிரபல தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் வாணி போஜன்.
தற்போது அந்த சீரியலை கலைஞர் டிவியில் மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். வாணி போஜன் அதன் பிறகு சினிமாவில் களமிறங்கி நடித்து வருகிறார். விக்ரம் - துருவ் நடித்து இருந்த மஹான் படத்தில் வாணி போஜன் ஒரு ரோலில் நடித்து இருந்தார்.
ஆனால் அந்த பகுதிகள் முழுவதுமாக நீக்கிவிட்டார்கள். படத்தின் நீளத்தை குறைக்க அப்படி செய்துவிட்டார்கள். அதனால் வாணி போஜன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் தனது போட்டோஷூட் ஸ்டில்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோஷூட் பார்ப்பதற்கு அப்படியே நயன் தாரா போல் இருக்கிறார். அச்சு அசல் நயன் தாரா ஸ்டைலில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் வாணி போஜன்.