காசுக்காகவோ அதுக்காகவோ நான் படம் நடிக்கல.. வெளிப்படையாக பேசிய நடிகை வாணி போஜன்..
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சீரியல் வாய்ப்பு பெற்று நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் என்ற சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வாணி போஜன் வெள்ளித்திரை வாய்ப்புகளை தட்டி சென்றார்.
சின்னத்திரை நயன்தாரா
இதன்மூலம் சின்னத்திரை நயன் தாரா என்ற பெயரையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றார் வாணி போஜன். அதிகாரம் 79 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ஓமை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சியான் விக்ரமுடன் மகான் படத்தில் நடித்து அந்த காட்சிகள் படத்தில் இருந்து டெலீட் செய்ததால் கடுமையான சோகத்தில் இருந்தார் வாணி போஜன். இதனை அடுத்து, 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் வாணி போஜன் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

வாய்ப்புகள்
நடிகர் பரத்துடன் மிரள் என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் அப்படத்தின் பிரமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார் வாணி போஜன். அப்படி ஒரு பேட்டியில், இப்படியான படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைபடுவது என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு வாணி போஜன், எந்தவொரு பிளான்லாம் ஒன்னும் இல்லை. எடுக்குற படம் எல்லாம் சரியாக எடுத்து வருகிறேன். அவசரப்பட்டு எதையும் எடுக்கல.
காசுக்காகவோ பிரடெக்ஷன் அவுஸ் சொல்றாங்கனோ எடுத்ததில்லை. சரியான பாதையில் சென்று வருகிறேன். ஜக்குபாய் படத்தை போன்ற கதையில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார் வாணி போஜன்.