தலையில் அடியோடு மரணமடைந்த பிரபல பின்னணி பாடகி!! உண்மையை கூறிய பணிப்பெண்...
இந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்து வந்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம். 1971ல் வெளியான குட்டி என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா, மராத்தி, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார்.
பெரும்பாலும் தமிழில் இசைஞானி மற்றும் எம் எஸ் வி- இசையில் தான் அதிகமாக பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். சமீபத்தில் தான் அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதினை கொடுப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் வாணி ஜெயராம் தன்னுடைய வீட்டில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அதன்பின் மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் போது மரணமடைந்துள்ளார் வாணி ஜெயராம். இந்த செய்தி தற்போது இந்திய சினிமா வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.
அவரது வீட்டில் தினமும் வேலை செய்யும் பெணிப்பெண் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டிக்கொடுத்துள்ளார். அதில், வழக்கம் போல் வீட்டிற்கு வந்த போது கதவு திறக்காமல் இருந்தது. பலமுறை கதவை தட்டியும் அவர் திறக்காமல் இருந்தார்.

இதனால் சந்தேகம் ஏற்பட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றோம். அப்போது வாணி ஜெயராம் ரத்தம் வழிந்தபடி மயக்கத்தில் கீழே கிடந்தார்.
போகும் வழியில் மரணமடைந்தார் என்றும் 10 வருடமாக அவரின் வீட்டில் வேலை செய்து வருகிறேன். அவருக்கு உடல்நிலை நன்றாக இருந்தது எந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை என்று அந்த பணிப்பெண் கூறியுள்ளார்.