அப்படின்னா 40 வயசுக்கு மேல் எதுவுமே பண்ணக்கூடாது!! வனிதா மகள் ஜோவிகா பளீச்..
மிஸஸ் அண்ட் மிஸ்டர்
நடிகர் வனிதா இயக்குநராக அறிமுகமாகி நடித்துள்ள படம் தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர். ராபர்ட் மாஸ்டர் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். வனிதாவின் மகள் ஜோவிகா இப்படத்தினை தயாரித்து சமீபத்தில் ரிலீஸானது. இப்படத்தினை பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், இளையராஜா ராயல்டி குறித்து வழக்கும் போட்டிருந்தார்.
இதுகுறித்து வனிதா சரியான விளக்கமும் கொடுத்து வந்த நிலையில், 40 வயதுக்கு மேல் என்ன இவங்களுக்கு ரொமான்ஸ் தேவை என்று கமெண்ட் போடுவார்கள் என்றும் 20 வயதில் ஒருவரை திருமணம் செய்தால் 40 வயதில் அவரிடம் ரொமான்ஸ் பண்ண கூடாதா என்று கேள்வி கேட்டிருந்தார்.
40 வயசுக்கு மேல் எதுவுமே
இதற்கு ஜோவிகா பேசுகையில், இதெல்லாம் பார்த்தா 30 - 40 வயதிற்கு மேல் எதுவுமே செய்யக்கூடாது, சிரிக்க, அழுக, கோபம் எரிச்சல் என எதுவுமே வரக்கூடாது. எந்த எனோஷன்ஷையும் ஃபீல் பண்ணக்கூடாது. காதல் என்பது ஒரு எமோஷன்.
பல எமோஷ்னல்களில் காதல் என்பதும் ஒன்று. ஒருகுறிப்பிட்ட வயதுக்குப்பின் அதை செய்யக்கூடாது என்றால் நீங்கள் எதுவுமே செய்யக்கூடாது, ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஜோவிகா.