திரிஷாவும் ஜெயலலிதா போல்தான்!! விஜய் ரெண்டு இடத்துல நிக்க இதான் காரணம்!! நடிகை ஓபன் டாக்..

Vijay Trisha Vanitha Vijaykumar Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Jai May 03, 2026 01:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, தற்போது கருப்பு, விஸ்வபரம்பரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் நடித்த கருப்பு படம் வரும் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஒரு ஒரு பக்கம் இருக்க, திரிஷா பற்றிய பல விஷயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதற்கு காரணம், தவெக தலைவர் விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றது முதல், விஜய்யுடன் நடித்த படங்களின் பாடல்களை இணையத்தில் பகிர்வது வரை பலராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாளை மே 4 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகவுள்ளது.

திரிஷாவும் ஜெயலலிதா போல்தான்!! விஜய் ரெண்டு இடத்துல நிக்க இதான் காரணம்!! நடிகை ஓபன் டாக்.. | Vanitha Bold Claim Trisha Reason Behind Vijay Move

அதே நாளில் தான் நடிகை திரிஷாவின் 33 வது பிறந்தநாளும் கூட. பிறந்தநாளுக்கான சில பதிவுகளை திரிஷா பகிர்ந்து வரும் நிலையில், தன்னுடைய தோழிகளான நடிகை சார்மி கவுர், நிகிதா பட்டேலுடன் ப்ரீ பர்த்டே கொண்டாட்டத்தை வெளிநாட்டில் கொண்டாடி இருக்கிறார் திரிஷா.

திரிஷா ஜெயலலிதா

இந்நிலையில் திரிஷாவின் செயல்பாடுகள் குறித்து வனிதா சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றிப்பெறுவார். அதில் ஒரு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்துவிட்டு அங்கு திரிஷாவை போட்டியிட வைப்பார், அதற்கு திரிஷா தகுதியானவர் தான், நன்றாக படித்தவர். நன்கு ஆங்கிலம் பேசுவார். திரிஷா ஜெயலலிதாவை போலதான் சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர். நன்னடத்தை கொண்டவர், புத்திசாலி, மரியாதை தெரிந்தவர்.

திரிஷாவும் ஜெயலலிதா போல்தான்!! விஜய் ரெண்டு இடத்துல நிக்க இதான் காரணம்!! நடிகை ஓபன் டாக்.. | Vanitha Bold Claim Trisha Reason Behind Vijay Move

எனக்கு திரிஷாவை பர்சனலாகவும் தெரியும். அவர் அரசியல்வாதியாக இருப்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர். அவர் கட்டாயம் அரசியலில் களமிறங்குவார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. திரிஷா போன்ற பெண் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும். அனைவரும் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்த விவாதங்களை விட்டுவிட்டு, இருவருக்கும் எந்தளவுக்கு அறிவும் திறமையும் இருக்கிறது என்பதை பாருங்கள்.

ஒருவரின் மனைவி, காதலி என்ற அடையாளம் மட்டுமே பெண்ணுக்கு கிடையாது, அதைக் கடந்து அவருக்கும் தனிப்பட்ட அடையாளம் உள்ளது, அறிவு உள்ளது. அவர்களுக்கு இடையிலான உறவு குறித்து மற்றவர்கள் மிகவும் கொச்சையாக பேசுவதை பார்த்து எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.