வனிதாவின் மூன்றாவது கணவர் திடீர் மரணம்.. காரணம் என்ன தெரியுமா?
Vanitha Vijaykumar
By Dhiviyarajan
1995 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வனிதா. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து கொண்டார். இதில் மூன்றுமே விவாகரத்தில் தான் முடிந்தது.
மூன்றாவதாக பீட்டர் பாலை 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தால் இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் பீட்டர் பால் சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
பீட்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று பல பேட்டிகளில் வனிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது