ஏற்கனவே ரம்யா கிருஷ்ணனுடன் பிரச்சனை! நகுலுக்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்.

vanitha nakkhul ramyakrishnan bbjodigal
By Jai Aug 06, 2021 07:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். திருமணம், விவாகரத்து, பலருடன் சண்டை என சிக்காத இடமே இல்லை என்று தான் கூற முடிகிறது. அந்தவகையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிபி ஜோடிகளில் கலந்து கொண்டு நடனமாடினார் வனிதா.

பின் நிகழ்ச்சி குழு தன்னை அவமானப்படுத்தியும் தரைகுறைவாக பேசியும் வருகிறார்கள் என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். ரம்யா கிருஷ்ணனால் தான் நிகழ்ச்சியை விட்டு விலகினேனா என்ற கேள்விக்கு தன் நடனத்திற்கு சரியான மதிப்பெண் கொடுக்கவில்லை, அவர்கள் கூறிய விமர்சனமும் ஏற்கமுடியாமல் சென்றேன் என்று கூறினார்.

இதற்கு நகுல் பேட்டியொன்றில், வனிதா எங்களை அசிங்கமான பெயரை கூறி திட்டினார். ரம்யா கிருஷ்ணனிடன் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் எவ்வளவு பெரிய நடிகை என்று கூறியிருந்தார். அவர் இப்படி பேசியதை ரசிகர் ஒருவர் வனிதாவின் டிவிட்டர் ஐடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். வனிதா அதற்கு பதிலளித்த வனிதா, என் வாழ்க்கையில் படங்களில் பிஸியாக இருந்து வருகிறேன்.

வேலையில்லாத இடியட்களில் உளறல்களை கண்டுகொள்ள நேரமில்லை. செட்டில் என்ன நடந்தது பிரச்சனை முடிந்த பிறகு நடுவர்களை வைத்து ஷூட் செய்து எடிட் செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஒருவருடன் பிரச்சனை வருகிறது என்றால் ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது என்று தான் அர்த்தம். அது எங்களுக்கு நடுவில் தான். நாங்கல் இருவரும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கையில் மற்றவர்கள் அதை பற்றி விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.