பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டரை காதலிச்சதே இதுக்கு தான்.. உண்மையை உடைத்து சுயரூபத்தை காட்டிய வனிதா
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக சந்திரலேகா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் வனிதா விஜயகுமார். இப்படத்திற்கு பிறகு சரியான வாய்ப்பில்லாமல் திருமணம் செய்து கொண்டார் வனிதா.
வனிதா திருமணம்
இதன்பின் இரு விவாகரத்து, அப்பா குடும்பத்துடன் சண்டை என்று இருந்து இரு மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிய சில நாட்களின் பீட்டர் பாலின் நடத்தை சரியில்லை என்று அவரையும் விட்டு பிரிந்தார். இதற்கு முன் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் நெருக்கமாக இருந்து வந்தார் வனிதா. தற்போது பிக்பாஸ் 6ல் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டு தனக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது என்று உண்மையை கூறியிருந்தார்.
பப்ளிசிட்டி வனிதா
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ராபர்ட் மாஸ்டருடன் பழகியது குறித்து சர்ச்சையாக பேசியிருக்கிறார் வனிதா. அதில், அவன் என்ன, என் புருஷனா, பாய்ஃபிரண்ட்-ஆ. நானே பப்ளிசிட்டிக்காக அவனை யூஸ் பண்ணினேன்.
ஏற்கனவே 2007ல் திருமணமாகி குழந்தை இருக்குன்னு சொன்னான், அது யாருன்னே எனக்கு தெரியாது, அவங்க எங்க இருக்காங்கன்னும் எனக்கு தெரியல என்று கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவன் என்ன புருஷனா இல்ல Boyfriend-ஆ -Bigg Boss Review with @vanithavijayku1
— IndiaGlitz - Tamil (@igtamil) October 14, 2022
Full Video:https://t.co/055fVg2NyP#BiggBoss #BiggBossTamil #Vanitha #KamalHaasan #VjMaheshwari #Robert #BBReview #Indiaglitz pic.twitter.com/enpKVuCq4c