பீட்டர் பால் என்னுடைய புருஷனே இல்ல! நடிகை வனிதா ஆவேசம்
Vanitha Vijaykumar
By Dhiviyarajan
கடந்த 2020 -ம் ஆண்டு வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
சமீபத்தில் பீட்டர் பால் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் வனிதாவின் மூன்றாம் கணவர் பீட்டர் பால் குறித்து செய்திகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியானது.
தற்போது இது பற்றி பேசிய வனிதா, "பீட்டர் பால் நானும் 2020 -ம் ஆண்டு உறவில் இருந்தோம் ஆனால் நாங்கள் இருவருமே அதே ஆண்டில் பிரிந்துவிட்டோம். அவர் என்னுடைய கணவர் கிடையாது. நான் சிங்கிளா தான் இருக்கிறேன். பீட்டர் பால் என்னுடைய கணவர் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்" என்று கூறியுள்ளார்.