நோயால் பாதிக்கப்பட்டுள்ள வனிதா விஜயகுமார்.. இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாரா
Vanitha Vijaykumar
Tamil Actress
By Kathick
திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவரை சுற்றி எப்போதுமே எதாவது ஒரு சர்ச்சை வந்துகொண்டே இருக்கும்.
சமீபத்தில் கூட இவர் காதலித்த பீட்டர் பால் மரணமடைந்தார். ஊடகங்கள் அனைவரும் வனிதாவின் மூன்றாவது கணவர் மரணம் என கூறவும் கடுப்பான வனிதா, பீட்டர் பால் தன்னுடைய கணவர் இல்லை என பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனக்கு நோய் ஒன்று இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறுகையில் தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். சின்ன இடங்களில் தன்னால் இருக்க முடியாது என்றும் லிப்ட், கழிவறை போன்ற இடங்களிலும் அதிக நேரத்தை தன்னால் செலவழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.