என்ன சிம்ரன் இதெல்லாம்? போட்டோஷூட்டால் முகம் சுளிக்க வைத்த வாரிசு நடிகை.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவின் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் விஜய குமார். இவரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார் 1995 -ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வனிதா நடித்திருப்பார்.
சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த வனிதா, தன்னுடன் நடித்து வந்த ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின் அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ரி- என்ட்ரி கொடுத்தார். தற்போது வனிதா பல படங்களில் நடித்து வருகிறார்.
ட்ரோல்
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் மாடர்ன் லுக்கில் புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வனிதாவா இது? என்று முகம் சுளித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.