சரத்குமார் மகள் வரலட்சுமியை கால்களால் மிதித்த நடிகர்!! இயக்குனர் பாலா செய்த செயல்..
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமார் மகளாக போடா போடி படத்தில் நடித்தப்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் வில்லி ரோலிலும் நடித்து வரும் வரலட்சுமி, பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயத்தார்த்தம் செய்து கொண்டார்.
அவர்கள் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தாரத் தப்பட்டை படத்தில் நடித்த ஒரு காட்சியில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். வில்லன் ரோலில் நடித்திருந்த ஆர் கே சுரேஷ், ஒரு காட்சியில் என்னை கால்களால் மிதித்து உதைப்பது மோல் அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சிக்கு முன் ஆர் கே சுரேஷிடம் பார்த்து மிதிடா என்று கூறினேன்.
ஆனால் அதையெல்லாம் கேட்காமல் நன்றாக மிதுமிதுன்னு மிதித்துவிட்டான். அப்போது என் கழுத்துப்பகுதி எலும்பு முறிந்துவிட்டது அப்போது எனக்கு அந்த சத்தம் கேட்டபோது தெரிவிட்டது. படப்பிடிப்பு நடக்கும் போது நிறுத்திவிட்டால் மீண்டும் அந்த காட்சியை நடக்க வேண்டும். காட்சியின் ஷூட்டும் சரியாக போனதால் நான் அப்படியே நடித்து விட்டேன்.
அதன்பின் இயக்குனர் பாலா என் நடிப்பை பார்த்துவிட்டு வியப்பில் ஆழ்ந்து கழுத்தில் இருந்த தங்க செயினை என் கழுத்தில் போட்டார். அதன்பின் சார் கொஞ்சம் ஆஸ்பிட்டல் வரைக்கும் சென்று வருகிறேன் என்று கூறி என்ன நடந்தது என்று கூறிவிட்டு சென்றேன் என்று வரலட்சுமி ஓப்பனாக பேசியிருக்கிறார்.
You May Like This Video