சம்பளத்தை உயர்த்தி கேட்க்கும் நடிகை ராஷ்மிகா ! எவ்வளவு தெரியுமா

Rashmika Mandanna
By Jeeva Aug 07, 2022 09:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதன்படி ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்போது வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் நிலையில் ஒரு துறைமுகத்தில் எடுக்கப்படும் ஆக்‌ஷன் காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா புஷ்பா படத்திற்கு முன் படம் ஒன்றிற்கு ரூ. 2 கோடியை சம்பளமாக வாங்கி வந்தாராம்.

ஆனால் தற்போது சம்பளத்தை ரூ. 3 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம், மேலும் பாலிவுட் திரைப்படம் என்றால் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடியை சம்பளமாக கேட்ப்பதாக சொல்லப்படுகிறது.