200 கோடி வசூல் என கூறிய தில் ராஜு.. ஆனால் இன்னும் லாபமே வரவில்லையாம்
Vijay
Varisu
By Kathick
9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. கடந்த 11ம் தேதி வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் யாருடைய திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது என்று கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களில் துணிவு படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துவிட்டதாம். ஆனால் வாரிசு இதுவரை லாபத்தை கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுவரை வெளிவந்த வசூல் கணக்கின்படி துணிவு திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிகம் வசூல் செய்து லாபத்தை எட்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வாரிசு திரைப்படம் இன்னும் ரூ. 50 கோடி வசூல் செய்தால் மட்டுமே லாபத்தை எட்டும் என்று தெரியவந்துள்ளது.