அவர் நடிச்சது எல்லாம் வேஸ்ட்!! பிரபல நடிகையின் காட்சியை வெட்டித்தூக்கிய வாரிசு இயக்குனர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் இன்று வாரிசு படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வாரிசு படம் தற்போது விழாக்கோலம் போல ஜொலித்து வருகிறது. ஒரு சிலரிடம் கலவையான விமர்சனமும் வாரிசு படத்திற்காக கூறி வந்தாலும், விஜய்யின் பெற்றோர்களை வைத்தும் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த காட்சி 4 மணிநேரத்திற்கு மேல் என்றும் அதில் 1.17 மணி நேர காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் படத்தின் எடிட்டர் மற்றும் இயக்குனர் வம்சி பேட்டிகளில் கூறி வந்தனர்.
ஆனால் படத்தில் நடிகை குஷ்பூவின் காட்சி 17 நிமிடங்கள் இருந்ததாகவும் அவர் மிகவும் சிறப்பாக நடித்தார் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் வம்சி.
சில தேவைகளுக்காக அவரின் காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் ஓப்பனாக கூறியிருக்கிறார் வம்சி.