64 -வது வயதில் மூன்றாம் திருமணமா? வாரிசு பட நடிகை ஜெயசுதா பற்றி போட்டோவுடன் பரவும் நியூஸ்

Vijay Jayasudha Varisu
By Dhiviyarajan Jan 15, 2023 08:45 AM GMT
Report

வாரிசு- துணிவு 

தளபதி விஜய் நடிப்பில் 11 -ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் மக்கள் இடத்தில நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே தினத்தில் தான் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

ஜெயசுதா

விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தவர் பிரபல நடிகை ஜெயசுதா. இவர் 1972 -ம் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினர் . பின்னர் ஜெயசுதா கே பாலச்சந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த இவர், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு ஏற்ப்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர்.

இதன் பின் ஜெயசுதா 1985- ம் நிதின் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிதின் கபூர் 2017 -ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் மரணத்தால் மனம் உடைந்த ஜெயசுதா சில ஆண்டுகள் கழித்து திரைப்படங்களில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

64 -வது வயதில் மூன்றாம் திருமணமா? வாரிசு பட நடிகை ஜெயசுதா பற்றி போட்டோவுடன் பரவும் நியூஸ் | Varisu Movie Actress Third Movie

மூன்றாவது திருமணம்

தற்போது 64 வயதான ஜெயசுதா மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இதை குறித்து ஜெயசுதா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.    

ஒரு பிரபல தொழிலதிபர் உடன் அவர் மிக நெருக்கக்மாக இருக்கிறார், அவர் உடன் தான் பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்கிறார் எனவும் கூறப்படுகிறது.