வாரிசு இந்தி மெகா சீரியல்-ஆ!! 1 கோடி வாங்கியும் மோசமான விமர்சனம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் இன்று வாரிசு படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகள் வெளியான இப்படத்தின் பிரீமியர் ஷோ நேற்று இரவு 8.30 மணிக்கு சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. பல நட்சத்திரங்களும் பத்திரிக்கையாளர்களும் ஷோவில் கலந்து கொண்டு பார்த்தனர்.
அதில் பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே விஜய் வாரிசு படத்திற்காக ப்ளூ சட்டை மாறனுக்கு 1 கோடி ரூபாய் நல்ல விமர்சனத்திற்காக கொடுத்துள்ளார் என்ற செய்தி பரவியது.
இதனால் வாரிசு படத்தினை புகழ்ந்து தள்ளுவார் என்று பலர் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தற்போது ப்ளூ சட்டை மாறன் வாரிசு படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
வாரிசு மெகா சீரியல் சொல்வதை விட இந்தி மெகா சீரியல் என்று சொல்லலாம் என்று படுமோசமான விமர்சனத்தை கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.