வாரிசு திரைப்படம் இல்லை அது மெகா சீரியல் .. படத்தின் ட்ரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Vijay Vamshi Paidipally
By Dhiviyarajan Jan 04, 2023 06:30 PM GMT
Report

முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. தளபதி விஜய் பேசும் வசனங்களும், ஸ்டண்ட் காட்சிகளும் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.

இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள் சிலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

வாரிசு திரைப்படம் இல்லை அது மெகா சீரியல் .. படத்தின் ட்ரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள் | Varisu Movie Trailer Trolls

ட்ரோல்கள்

இப்படத்தின் இயக்குனர் தமிழ் படங்களின் சாயலில் தான் வாரிசு படத்தை எடுத்திருக்கிறேன் என்று சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் சிலர் வாரிசு படம் மகேஷ் பாபு படங்களின் ரீமேக் போன்று இருக்கிறது என ட்ரைலர் பார்த்த பின் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து வாரிசு திரைப்படம் ட்ரைலர் மெகா சீரியல் போல இருக்கிறது. இதற்கு முன்பு தமிழ் படங்களில் வந்த கதையே தான் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பாரபட்சம் பார்க்காமல் ட்ரோல் செய்கின்றனர் .