போலி பிம்பத்தை காட்டிய விஜய்.. பார்க்க வந்த ரசிகர்களை ஓடஓட லத்தியில் அடித்த போலிசார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பின் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படம் குடும்ப கதையை மையமாக வைத்து மாஸ் படமாக உருவாகி வருகிறது.
சென்னையில் கடைசி கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் ஷூட்டிங்கில் ஒருசில புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் லீக்கானதை அடுத்து மிகுந்த பாதுகாப்புடன் படத்தினை முடிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதனால் என்னூரில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கின் பாதுகாப்பினை பலப்படுத்த யாரும் உள்ளே நுழையாத வண்ணம் பார்த்து வருகிறார்கள்.அப்படி இருக்கையில் தங்களுடைய தளபதியை பார்க்க ரசிகர்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு பல நூறு ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
இதனால் கட்டுப்படுத்தமுடியாமல் போலிசாரை அழைத்த படக்குழுவினர் லத்தி சார்ஜ் செய்துள்ளனர். தற்போது இந்த விசயம் இணையத்தில் மிகப்பெரியளவில் பேசுபொருளாக மாறி விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இப்படியொரு சம்பவம் நடைபெற்றுள்ள என்பது கூடவா விஜய்க்கு தெரியாமல் போகும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Fans gathered to see actor #Vijay at Ennore #Varisu shoot were sent back with lathi charge.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 27, 2022
Many were disappointed as they couldn't get the glimpse of their star.