வாரிசு தயாரிப்பாளருக்கு குண்டைத்தூக்கி போடப்போகும் விஜய்!! பகீர் தகவல்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தும் இருதுருவ நட்சத்திரங்களாகவும் இருந்து வருபவர்கள் விஜய், அஜித். அவர்கள் இருவரின் நடிப்பில் பல ஆண்டுகள் கழித்து பொங்கல் அன்று போட்டிப்போடவுள்ளது.
விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் எந்த தேதியில் வெளியாகும் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிடாமல் இருந்துள்ளனர்.
ஏற்கனவே துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இன்று ஜனவரி 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வாரிசு டிரைலர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இரு படத்தின் சென்சார் அறிக்கை வெளியாகியிருக்கிறது. இரு குழுவை சேர்ந்தவர்களும் துணிவு, வாரிசு படத்தினை பார்த்துள்ளனர். அவர்கள் பார்த்தவகையில் படம் எப்படி இருக்கிறது என்ற தகவலை வலைப்பேச்சு பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
அதில், துணிவு படம் இடைவேளைக்கு பின் பயங்கரமான ஆக்ஷனும், முதல் பாதி நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. வாரிசு படம் பிரம்மாதமான குடும்ப படம் என்பதால் ரசிகர்களை உருக வைத்தால் பிளாக் பஸ்டராகவும் சொதப்பினால் பிளாக் பிளாப் படமாக அமையும் என்பதை கூறியுள்ளார்கள்.
இந்த தகவல் கசிந்து விட்டால் பிரச்சனையாகிவிடும் என்பதால் சென்னையும் சென்சார் செய்வதை விட ஹைதராபாத்தில் வைத்து சென்சார் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் இடையே குழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தான் தில் ராஜு பல பிரமோஷன் வேலைகளை செய்து வருகிறாராம்.