துணிவுக்கு பயத்தை காட்டிய வாரிசு!! மாஸ் டயலாக்கில் விஜய்யின் டிரைலர்

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Edward Jan 04, 2023 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இரு உச்ச நடிகர்களாக விளங்கிய கமல் - ரஜினிக்கு அடுத்து பேசப்பட்டு வருபவர்கள் நடிகர் விஜய் - அஜித். அவர்கள் நடிப்பில் துணிவு, வாரிசு படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

இரு நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாடி வரும் சூழலில் சமீபத்தில் துணிவு படத்தின் டிரைலர் வெளியானது. ஆனால் துணிவு டிரைலர் விஜய்யின் ரெக்கார்ட்டை முறியடிக்க முடியவில்லை.

துணிவுக்கு பயத்தை காட்டிய வாரிசு!! மாஸ் டயலாக்கில் விஜய்யின் டிரைலர் | Varisu Trailor Record Between Thunivu Trailor

இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியது. வெளியான 9 நிமிடத்திற்குள் 10 லட்சம் பார்வைகளையும் 3 லட்சம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

மேலும் வெளியான 48 நிமிடத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் 9 லட்சம் லைக்ஸ்களையும் பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. குடும்ப செண்டிமெண்ட் மற்றும் மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகி மக்கள் மத்தியில் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

அதிலும் விஜய்யின் மாஸ் டயலாக்குகள் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. வாரிசு டிரைலரை வைத்து துணிவு டிரைலரை விஜய் ரசிகர்கள் விமர்சித்தும் கிண்டலடித்தும் வருகிறார்கள்.