வாரிசு படத்தில் விஜய்க்கு டூப் போட்டவரே இவர்தான்!! வைரலாகும் புகைப்படத்தை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் ஸ்டண்ட் காட்சிகளிலோ விபரீத காட்சிகளிலோ கதாநாயகன் மற்றும் நாயகியின் பாதுகாப்புக்காக டூப் கலைஞர்களை வைத்து காட்சிகளை எடுப்பார்கள்.
அப்படி முன்னணி நடிகர்கள் டூப் போட்டு நடிக்க வைத்தால் நெட்டிசன்கள் அதை கிண்டல் செய்து வருவார்கள். அப்படி சமீபத்தில் விஜய், அஜித் படங்களில் டூப் பயன்படுத்தினார் அவர்களது ரசிகர்கள் அதுகுறித்து இணையத்தில் சண்டை போட்டு வாக்குவாதம் செய்து வருவார்கள்.
சமீபத்தில் கூட துணிவு படத்தில் அஜித் கடலில் போட் ஓட்டும் காட்சியில் டூப் பயன்படுத்தினார் என்று விஜய் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். அதற்கு பதிலடியாக வாரிசு படத்தின் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானதை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
???? pic.twitter.com/Cl4TZgh65V
— தல அரவிந்த் (@aravinth43AK) January 24, 2023
வாரிசு படத்தில் விஜய்க்கு டூப்-ஆக ஒருவர் பயன்படுத்தியுள்ளனர். அந்த கலைஞர் வாரிசு பட இயக்குனர் வம்சியுடனும் பைக்கில் எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகியது. ஒரு சீரியலுக்கு கூட டூப் வேண்டுமா என்று கண்டபடி கலாய்த்து வெச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

