நேஷ்னல் கிரஸ்-க்கே பூவைத்த நடிகர் விஜய்.. வாரிசு படத்தை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் போஸ்டர்களை இணையத்தில் படக்குழு வெளியிட்டு வருகிறது.
லீக்
சமீபகாலமாக வாரிசு படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் வீடியோக்கள் லீக்காகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதுகாப்பில்லாமல் ஷூட்டிங் எடுப்பதாக ரசிகர்கள் கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனத்தை திட்டி வந்தனர். இதை போக்க அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டது. அதேபோல் வாரிசு படத்தின் தமன் இசையில் உருவாகிய ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடலின் பிரமோ வீடியோ வெளியானது.
ராஷ்மிகா மந்தனா
இன்று மாலை 5. 30 மணிக்கு முழு பாடல் வெளியாகவுள்ளது. இதனை அறிவிக்கும் விதமான விஜய் வாரிசு படத்தில் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. வாயில் ரோஜாப்பூவை கடித்தவண்ணம் ராஷ்மிகாவிடம் கொஞ்சும் புகைப்படத்தை இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
