கறி வாங்கவா? இல்லை காய்கறி வாங்கவா?.. விலை கேட்டு மக்கள் குமுறல்! - ட்வீட் தொகுப்பு
இப்போது காய்கறி விலை பெரிய உச்சத்தில் இருக்கிறது. விலையேற்றம் மக்களை அதிகம் பாதித்து வருவதாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இணையத்திலும் நெட்டிசன்கள் இந்த கருத்தை கூறி குமுறி வருகின்றனர். அப்படி நெட்டிசன்கள் போட்டிருக்கும் சில காமெடியான குமுறல் ட்விட்கள் தொகுப்பு இதோ..
”கறி வாங்கவா? இல்லை காய்கறி வாங்கவா? என யோசித்தால் அவனுக்கு சாமானியன் என்று பெயர்..!” என ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையில் கறி வாங்கவா? இல்லை காய்கறி வாங்கவா? என யோசித்தால் அவனுக்கு சாமானியன் என்று பெயர்..!
— 😀செந்திலின்_கிறுக்கல்கள்😀 (@Annaiinpillai) December 7, 2021
”காய்கறி சந்தைல வாங்குறதுக்கு பதில், பங்கு சந்தைல வாங்கினா வழக்கைல முன்னெரலாம் போல” என இன்னொருவர் கூறி இருக்கிறார்.
காய்கறி சந்தைல வாங்குறதுக்கு பதில்
— Dr சேலத்து இளவரசி 🦋 (@GirlFromSalem) December 7, 2021
பங்கு சந்தைல வாங்கினா வழக்கைல முன்னெரலாம் போல
காய்கறி விலை 😫
இன்னொருவர் விரக்தியின் உச்சத்திற்கே சென்று பேசி இருக்கிறார்.
அவன் அவன் வாழவே வீடு இல்லாம வாடகை வீட்டுல இருக்கான்... இதுல.. எங்க போய் விவசாயம் பண்றது... pic.twitter.com/A69lVytBOz
— ɪᴛꜱ_ᴍᴇ_ᴘʀᴀᴋᴀꜱʜʀᴀᴊ🐼 (@its_me_dood) December 7, 2021