கற்பை இழந்த வெண்பா விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. தாலிக்கட்ட தயரான பாரதி?

Bharathi Kannamma Serials
By Edward Sep 29, 2022 01:10 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த வாரங்களில் மருத்துவமனையை ஹைஜேக் செய்த தீவிரவாதிகள் பற்றிய காட்சிகள் ஒளிப்பரப்பாகி வந்தது.

கற்பை இழந்த வெண்பா விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. தாலிக்கட்ட தயரான பாரதி? | Venba Committed Suicide For Bharathi Marriage

கற்பை இழந்த வெண்பா

பாரதி மற்றும் கண்ணம்மாவின் வீரத்தினால் தீவிரவாதிகளிடம் இருந்து பொதுமக்கள் காப்பற்றப்பட்டனர். இதற்கு விருது நிகழ்ச்சியும் வைக்கப்பட்டது. இந்நிலையில் நிச்சயமான ரோஹித்தால் வெண்பா கற்பை இழந்த சம்பவமும் இடையில் நடைபெற்றது.

கற்பை இழந்த வெண்பா கர்ப்பமானதால் பாரதியை என் குழந்தைக்கு அப்பாவாக வேண்டும் என்று கூறி தாலிக்கட்ட கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பாரதி உதவி கேட்ட எண்ணவேணாலும் கேட்கலாமா? என்று திட்டித்தீர்த்து கிளம்பிவிட்டார்.

அப்பாவாகும் பாரதி

இதன்பின் வெண்பா எப்படியாவது பாரதியை தன் வலையில் சிக்க ஒரு பிளான் போட திட்டமிட்டுள்ளார். அதற்காக விஷம் வாங்கி குடித்துவிட்டு இதை பாரதியிடம் கூறி பதறவைத்துள்ளார் வெண்பா. கைக்கால் புரியாத பாரதி வெண்பாவின் வலையில் சிக்கி காப்பாற்ற கிளம்பி விடுகிறார். இதனால் பாரதி வெண்பாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பாவாக கல்யாணம் செய்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படி நாளுக்கு நாள் சீரியலை வேறு பாதையில் கூட்டிச்சென்று வெறுப்பேற்றுகிறாரே இயக்குனர் என்று புலம்பியும் இந்த சீரியலுக்கு எண்ட்டு கார்ட்டே இல்லையா என்று கேட்டு வருகிறார்கள்.