விஜய்க்கு 200 சி எனக்கு 10 தானா!! கோடிக்கு ஆசைப்பட்ட வெங்கட் பிரவுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்தில் பல கோடி செலவில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முழு ஷூட்டிங் நிறைவடையாத நிலையில் யாரும் எதிர்பார்க்க முடியாதபடி விஜய்யின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
விஜய்யின் அடுத்த 68வது படத்தினை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய்யின் 68வது படம் உறுதியானது. இந்நிலையில் தளபதி68 படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளமாக பெறவுள்ளார் என்ற தகவல் வெளியாகி ஷாக் கொடுத்தது.
ஆனால் அது உண்மை இல்லை என்று கூறப்பட்ட நிலையில் வெங்கட் பிரபுவின் சம்பளம் என்ன என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் படத்திற்காக வெங்கட் பிரபு ஏஜிஎஸ் நிறுவனத்திடம் 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.
ஆனால் 10 கோடி தான் சம்பளமாக கொடுக்க முன்வந்ததால் வெங்கட் பிரபு கொஞ்சம் அப்செட்டாக இருக்கிறாராம். இதே ஏஜிஎஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனை இயக்க வெங்கட் பிரபுவுக்கு 20 கோடி சம்பளமாக பேசப்பட்டதாம்.
இதனால் தான் வெங்கட் பிரபு கொஞ்சம் சோகத்தில் இருக்கிறாராம். இதற்கு முழுக்க காரணம் நாக சைதன்யாவை வைத்து இயக்கிய கஸ்டடி படத்தின் படுதோல்வி தான் வெங்கட் பிரபுவுக்கு குறைவான சம்பளம் கொடுக்க காரணம் என்று சினிமா விமர்சகர் பிஸ்மி கூறியுள்ளார்.