சூர்யா பட நடிகர் பிரதீப் ராவத் காலமானார்.. ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல்
பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமான செய்தி திரையரங்கினர் மட்டுமின்றி ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப் ராவத்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரதீப் ராவத். இவர் சூர்யாவின் கஜினி, அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கஜினி திரைப்படத்தின் மூலம்தான் இவர் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்நிலையில், 73 வயதாகும் நடிகர் பிரதீப் ராவத் இறந்துவிட்டார் என்கிற செய்தி வெளியாகி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரதீப் ராவத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று மாலை காலமானார்.

இவருடைய மறைவு ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.