52 வயது நடிகருக்கு ஜோடியாக ப்ரிய பவானி ஷங்கர்..நீங்களுமா
Ajith Kumar
Priya Bhavani Shankar
By Tony
ப்ரியா பவானி ஷங்கர் சுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார். இவர் நடித்த படங்கள் வந்தாலே தமிழ் சினிமாவில் பாதி படம் இவர் தான் ஹீரோயினாக தெரிவார்.
தற்போது கூட ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிஸியாக நடித்து வர, அடுத்து இவர் மெகா பட்ஜெட் படம் ஒன்றில் களம் இறங்கியுள்ளார்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவர் கெரியரில் இது தான் மிகப்பெரிய பட்ஜெட் படம்.
ஆம், அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் விடா முயற்சி படத்தில் இவர் கமிட் ஆகியுள்ளார்.
ஏற்கனவே அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார், இதில் இளம் வயது அஜித் ஒருவர் இருக்கிறாராம்.
அவருக்கு ஜோடியாக ப்ரிய பவானி ஷங்கர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.