வெற்றிமாறன் படத்திற்கே இந்த நிலைமையா!! தியேட்டரில் வந்த ஒரே வாரத்தில் ஓடிடிக்கு போகப்போகும் நிலை...
விடுதலை 2
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை 2. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார்.
முதல் பாகத்தை சூரி எப்படி சுமந்து சென்றாரோ அதுபோன்று இரண்டாம் பாகத்தை முழுமையாக விஜய் சேதுபதி டேக் ஓவர் செய்து கொண்டார். இதில், வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்தது அனைவரைலும் ஈர்க்கப்பட்டது.
இப்படத்தில் மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ், சேத்தன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
OTT ரிலீஸ்
இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்தும் சில விஷயங்கள் வெளியாகி உள்ளது. அதாவது, விடுதலை படத்தில் இரண்டு பாகங்களுக்காக எடுக்கப்பட்ட காட்சியை வைத்து விடுதலை 3 - ம் பாகம் வெளியிடும் அளவிற்கு பலமணிநேர காட்சிகள் வெற்றிமாறனின் கைவசம் உள்ளதாம்.
அதனால், OTT ரிலீஸ் செய்யும் போது சுமார் 1 மணிநேர காட்சியை இணைந்து வெளியிட இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 2 அல்லது 3 - ம் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.