இன்று வெளியான விடுதலை படத்தில் நடித்த நட்சத்திரங்களின் சம்பளம்.. வாரி வழங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம்
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் இன்று வெளியானது.
விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி என பலர் நடித்து இருக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிக குறைவாக இருக்கும், அதனால் இரண்டாம் பாகத்தில் வாத்தியார் பற்றிய காட்சிகள் அதிக அளவில் இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்று வருகின்றனர்.
நட்சத்திரங்களின் சம்பளம்
இந்நிலையில், இன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான விடுதலை படத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, வாத்தியாராக நடித்த விஜய் சேதுபதிக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. வாத்தியாரின் மனைவியாக நடித்த மஞ்சு வாரியருக்கு ரூ. 1 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. மேலும், சூரி ரூ. 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.