அஜித்தை பழிவாங்க குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகிய விக்னேஷ் சிவன்!! நயன்தாரா கொடுத்த பிளான்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன் தாரா நட்பு கிடைத்தது. அதன்பின் நட்பு காதலாக மாறி இருவரும் 7 வருடங்களாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நயன் தாராவுக்கு தாலிக்கட்டி மனைவியாக்கினார். பின் 4 மாதம் கழித்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றனர் நயன் - விக்கி. பல பிரச்சனைகளை கடந்து வந்த விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா சிபாரிசில் அஜித்தின் 62 வது படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்தாத விக்னேஷ் சிவன், கதையில் சொதப்பியதால் ஏகே62 -வில் இருந்து அஜித் மற்றும் லைக்கா தூக்கிவிட்டனர். இதனால் மன அழுத்தத்தில் விக்னேஷ் சிவன் இணையத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இதனை எப்படியாவது பழி வாங்க மனைவி நயன் தாரா பல பிளான்களை போட்டு வந்தாராம். அப்படி விஜய் சேதுபதிக்கு தனி ஒரு கதையை எழுதி கண்ஃபார்ம்மும் பண்ணிவிட்டாராம். நயன் - விக்கிக்காக விஜய் சேதுபதி நடிக்கும் அப்படம் தற்போது பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாம்.
அதற்காக அபிஷேக் பச்சனையும் நடிக்க வைக்க பிளான் போட்டுள்ளாராம். மேலும் பிரபல பாலிவுட் எழுத்தாளர் ஒருவர் கதையை எழுத கூப்பிட்டும் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

இதற்காக தன் மனைவி நயன் தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் மும்பையில் முகாமிட்டிருக்கிறார்களாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரவுள்ளதாகவும் அதுமுடிந்தது பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்கவும் திட்டம் தீட்டி வருகிறாராம் விக்னேஷ் சிவன்.
தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க விக்னேஷ் சிவன் தன் மனைவியுடன் பல விசயங்களை செய்து வருகிறாராம்.