நயன்தாரா ராசியால் விக்னேஷ் சிவனுக்கு அடித்த பெரிய வாய்ப்பு! அப்போ AK 61 வேலை என்னாச்சு

Ajith Kumar Nayanthara Vignesh Shivan
1 மாதம் முன்
Edward

Edward

நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நடிகை நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் கிடைத்தது. பல கஷ்டங்களுக்கு மத்தியில் தனக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்தவர் விக்னேஷ் சிவன் என்று பல மேடைகளில் நயன் தாரா தெரிவித்து வந்தார்.

காதல் டு திருமணம்

இதையடுத்து இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி நல்ல வெற்றியை கண்டபிறகு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். பிரம்மாண்ட முறையில் திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கி சிறப்பாக நடத்தி முடித்தனர். விக்னேஷ் சிவன் கட்டிய தாலியுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தும் அதன்பின் கேரளாவில் உள்ள அம்மாவை சந்தித்து ஆசி பெற்றும் வந்தனர்.

ஹனிமூன் ரிட்டர்ன்ஸ்

கடந்த வாரம் தாய்லாந்துக்கு ஹனிமூனுக்கு சென்ற விக்கி - நயன் அங்கு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். ஹனிமூன் முடிந்தது நயன் தார இந்தியா வந்த பிறகு மும்பையில் நடைபெற்று வரும் அட்லி - ஷாருக்கான் படமான ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பின் சென்னை திரும்பி விக்னேஷ் சிவன் ஏகே 61 படத்தின் வேலைகளில் மும்முரம் காட்டுவார் என்று ரசிகர்கள் நினைத்திருந்தார்கள்.

ஆனால் அந்த வேலைக்கு முன் சென்னை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்பும் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் ஏகே 61 படத்தின் வேலை எப்போ ரெடியாகும் என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.