பிரிய ஆசைப்படும் நயன் தாரா? அப்போ அதெல்லாம் கிடையாதா என ஏங்கும் காதல் இயக்குனர்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நயன் தாரா. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன் தாரா சில காரணங்களால் திருமணத்தையும் தள்ளிப்போட்டு வருகிறார்.
படபிடிப்பிற்காக இருந்தாலும் சரி பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி இருவரும் ஜோடியாக விமானத்திலேயே சுற்றி சிற்றி திரிந்தார்கள். இப்படியே இருக்கலாம் திருமணம் மட்டும் இப்போ வேண்டாம் என்ற குறிக்கோளுடன் இருவரும் இருந்து வருகிறார்கள். இதற்கு காரணம் நயன் தாராவின் மார்க்கெட் திருமணத்தால் இழக்க கூடாது என்பதுதானாம்.
அப்படி இருவரும் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருப்பதால் பிரிந்து வேலை செய்ய முடிவெடுத்திருகிறார்களாம். விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே62 படத்தின் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாலும், நயன் தாரா பாலிவுட் படங்களில் நடிக்கவுள்ளதாலும் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.
இதனால் சில மாதங்கள் இருவரும் பார்க்கவோ ஊர்சுற்றோ முடியாத சூழலில் தவித்து வருகிறார்கள் என்று கோடம்ப்பாக்கம் வட்டாரத்தில் கூறப்படுகிறது.