எனக்கு பத்திரிக்கை கொடுப்பீங்களா? விஜே பிரியங்காவை ஏமாற்றி, லீக்கான நயன் -விக்கி கல்யாண பத்திரிக்கை

Nayanthara Priyanka Deshpande Vignesh Shivan
By Edward May 29, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேல் காதலித்து இருபரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர்.

தற்போது இருவருக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்திகள் பரவியது. இதனை சமீபத்தில் கூட அதிகாரபூர்வமாக விக்னேஷ் சிவன் - நயன் தாரா கூறி வந்தனர். ஆனால் நயன் -விக்கியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் லீக்காகி வைரலானது.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் - நயன் தாரா ஜோடியாக விருதுவிழாவில் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே பிரியங்கா அவர்களை மேடைக்கு அழைத்து திருமணம் பற்றியும் என்னை அழைப்பீர்களா என்றும் கேட்டுள்ளார்.

அதற்கு விக்னேஷ் உங்களுக்கு தான் முதல் பத்திரிக்கை பிரியங்கா என்று கூறினார். இப்படியிருக்கையில் பத்திரிக்கை இணையத்தில் லீக்காகியுள்ளது. இதனை வைத்து பிரியங்காவை பலர் உங்களை விக்கி- நயன் கல்யாணத்துக்கு கூப்பிட்டாங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.