காதலர் தினத்தில் இருக்கமாக கட்டியணைத்த நயன்! விடாத காதல் இயக்குனர்..

nayanthara vigneshshivan kaathuvaakularendukaadhal KaathuVaakulaOruKaadhal NaanPizhai Valentine’s Day
By Edward Feb 14, 2022 08:34 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல கிசுகிசுக்களை சந்தித்து வந்தவர் நடிகை நயன் தாரா. அப்படி இருந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார் லேடி சூப்பர் ஸ்டார்.

காதல் தோல்வி என இருந்த நயனுக்கு ஒரு கட்டத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த ஆறுதல் காதலாக மாறியது. 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் எப்போது திருமணமாகும் என்ற கேள்வி தான் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் நயன் பல படங்களில் கமிட்டாகி வருவதால் திருமணத்தை ஒதுக்கி வருகிறார். இந்நிலையில் இன்று காதலர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடுவதை போன்று நயன் தாரா காதலர் விக்னேஷ் சிவனை சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளார்.

பின் எப்போதும் கட்டியணைக்கும் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார் நயன் தாரா. அப்புகைப்படங்களை இணையத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டு காத்து வாக்குல ஒரு காதல் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் காத்துவாக்குல ஒரு காதல் மட்டும் தானா? என்று கூறி கலாய்த்து வருகிறார்கள்.