முருகதாஸ்-க்கு துரோகம் செய்த விஜய்!! அதையே அஜித்தும் செஞ்சிட்டாரே...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் நடிப்பில் துணிவு, வாரிசு படங்கள் பொங்கல் அன்று போட்டிப்போட்டு வெற்றிநடை போட்டும் வசூலில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது.

இப்படத்தினை அடுத்து விஜய் தன்னுடைய 67வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 62வது படத்திலும் நடிக்கவும் உள்ளார்கள். அதில் விஜய் 67வது படத்தின் ஷூட்டிங்கினை ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணி தங்கள் வேலைகளை ஆரம்பிக்கவே இல்லாமல் இருந்தது ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில் அஜித் விக்னேஷ் சிவன் எழுதிய ஸ்கிரிப்ட் சரியாக இல்லை என்று அதை மாற்றச்சொல்லி இருக்கிறார். ஆனால் விக்னேஷ் சிவன் அதை செய்யாமல் இருந்தது அப்படத்தினை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்காமல் போயுள்ளது.
இதனால் அஜித்தின் 62வது படத்தினை விக்னேஷ் சிவனிடமிருந்து பறித்துவிட்டு அட்லீ, மகிழ்த்திருமேனி, விஷ்ணு வர்தன் ஆகிய இயக்குனர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து 63 வது படத்தினை விக்னேஷ் சிவனுக்கு கொடுக்கலாம் என்ற பேச்சு வெளியாகியது.

இப்படி விக்னேஷ் சிவனை ஏமாற்றிவிட்டாரே அஜித் என்று பலர் விமர்சித்து வந்தனர். அதில் சிலர் இதை போல் தான் விஜய், ஏ ஆர் முருகதாஸ்-க்கு தளபதி65 படத்தில் துரோகம் செய்தார்.
அது தெரியவில்லையா என்று உங்களுக்கு ஒரு நியாயம் அஜித்துக்கு ஒரு நியாயமா என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
விக்னேஷ் சிவனுக்கு பல ஆண்டு ஆசையாக அஜித்தை இயக்க வேண்டும் என்பது தான். அது தன் ஆசை மனைவி நடிகை நயன் தாராவால் அமைந்தும், கைக்கு எட்டாமல் போய்விட்டதே என்று விக்னேஷ் சிவன் வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார்.