குழந்தையை வைத்து இப்படியொரு தாக்குதலா? அஜித்தை மறைமுகமாகி தாக்கி அசிங்கப்படுத்திய நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்!!
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பாடலாசிரியராகவும் திகழ்ந்து முன்னணி இயக்குனராக அங்கீகாரம் பெற்று வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தினை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கண்ட விக்னேஷ் சிவன், அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நயன் தாராவுடன் காதலில் இருந்து வந்தார்.

7 ஆண்டுகளாக இருவரும் லிவ்விங் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர்.
அதன்பின் மனைவி நயன் தாரா சிபாரிசில் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 வது படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 8 மாதங்களாகியும் கதையில் சொதப்பிய விக்னேஷ் சிவனை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏகே62-ல் இருந்து தூக்கியது.
இந்த அவமானத்தால் விக்னேஷ் சிவன் இணையத்தில் ஏதாவது ஒரு ஸ்டோரியை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் மனைவி குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியது.

இந்நிலையில், என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி என்று கூறியதோடு அனைத்து வலிகளும் ஒரு நன்மை இருக்கிறது. அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது என்ற ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
தன் குழந்தையை கொஞ்சும் புகைப்படத்தோடு இந்த பதிவினை பகிர்ந்த விக்னேஷ் சிவன் மறைமுகமாக அஜித்தை தாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.